Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “எதிர்பார்த்த பணம் கையில் வரும்”.. திறமைகள் வெளிப்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். ஆதாயம் சிறப்பாக கிடைக்கும். நினைத்த காரியத்தில் விரயங்கள் கொஞ்சம் இருக்கும். குடும்ப பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். உங்களுடைய திறமைகள் வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் ஏற்படும். சொத்து தொடர்பான விஷயங்கள் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும் சுப செலவுகள் ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். செலவு கொஞ்சம் இன்று அதிகமாக தான் இருக்கும். ஆனால் தேவையான பணவசதி கிடைக்கும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். அந்த விஷயத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். அதுமட்டுமில்லாமல் இன்று காதலில் வயப்பட கூடிய சூழல் இருக்கும். உங்களுடைய வசீகரப் பேச்சு அனைவரையும் கவரும் விதமாகவே இருக்கும். மாணவச் செல்வங்கள் இன்று நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை அடையக்கூடும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவரின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை  மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் எப்பொழுதும் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |