நடிகை யாஷிகாவிடம் நீ செத்து போகலையானு கேள்வி கேட்ட ரசிகருக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் மகாபலிபுரம் சென்ற போது விபத்துக்குள்ளானதில் அவருடைய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் யாஷிகா ஆனந்த் இடுப்பு, முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் பட்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஐந்து மாதங்கள் எழுந்து நடக்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்த அவர், விரைந்து குணம் அடைய வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வாக்கிங் ஸ்டிக் உடன் மெதுவாக நடக்க பழகும் போட்டோக்கள் மூலம் ரசிகர்களுக்கு தனது உடல்நிலை குறித்து தெரிவித்தார்.
இந்த நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு வாக்கிங் ஸ்டிக் உடன் ஒரு கடை திறப்பு விழாவிற்கு அவர் வந்த அவரின் போட்டோகளை ரசிகர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைய வைத்த நிலையில், இந்த போட்டோவை பார்த்த ஒரு ரசிகர் ”நீ இன்னும் சாகலையா என்று கமென்ட் கொடுத்துள்ளார். அதற்கு எந்தவித கோபமும் இல்லாமல், பொறுமையாக பதில் அளித்த யாஷிகா, நான் சீக்கிரம் சாவதற்கு இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என பதிலளித்தார். ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு வந்தவரை பார்த்து இப்படியா கேட்பது என ரசிகர் கமெண்ட்டுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.