காமெடி நடிகருக்கு ஜோடியான அபர்ணா பாலமுரளி நடித்து வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
நடிகை அபர்ணா பாலமுரளி மலையாள மொழியில் வந்த மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக அறிமுகமாகி நடித்தார். தமிழ் மொழியில் எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு நடிகர் சூர்யா நடிப்பில் வெளி வந்த சூரரைப்போற்று படத்தில் கிடைத்த வாய்ப்பை கட்சிதமாக பயன்படுத்தியதால், அவரது நடிப்புக்கு பல திரை பிரபலங்களிடம் இருந்து, வாழ்த்தும் பாராட்டுக்களும் குவிந்தது.
இதை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்த நிலையில், டான்சராக சினிமா வாழ்வை தொடங்கி, பல காமெடி படங்களில் நடித்த மலையாள காமெடி நடிகரான நீரஜ் மாதவ்வுக்கு ஜோடியாக சுந்தரி கார்டன்ஸ் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.நீரஜ் மாதவ் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.