Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “நேற்றைய பிரச்சனை முடிவுக்கு வரும்”.. வரவேண்டிய பணம் வரும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாளாக இருக்கும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். நேற்றைய பிரச்சனை ஒன்று இன்று நல்ல முடிவுக்கு வரும். மருத்துவ செலவு கொஞ்சம் குறையும். இன்று கணவன் மனைவிக்கு இடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மையை கொடுக்கும். குழந்தைகளுக்கான பொருட்களை இன்று வாங்க கூடும்.

இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரக்கூடும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வரவேண்டிய பணமும் வந்து சேரும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும்.

அப்பொழுதுதான் பாடங்கள் நினைவில் வைத்துக் கொள்ள உதவும். அதுமட்டுமில்லாமல் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால்  அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |