ரயில்வே துறையில் வேலை செய்ய பணியாளர்கள் அதிகாரப்பூர்வ ரயில்வே பணியாளர் தேர்வு நிறுவனங்கள் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். அதற்கு இடைத்தரகர்கள் யாரும் கிடையாது. மக்கள் யாரும் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம். யாராவது ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக உங்களிடம் பணம் கேட்டால், ஊழல் தடுப்பு பிரிவு அலைபேசி எண் 90031 60022 -ல் புகார் அளிக்கலாம் என ரயில்வே துறை எச்சரித்துள்ளது. சமீபகாலமாக ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பண மோசடியில் ஈடுபட்ட 2 பேரை சென்னை வடபழனி போலீசார்,ரயில்வே ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Categories