தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவிற்கு வந்த நபரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஓமிக்ரான் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் தற்போது உருமாற்றமடைந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமரான ஸ்காட் மோரிசன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதி வரை தளர்த்தப்பட்ட கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை நிறுத்தி வைப்பதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.