செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, அதிமுகவில் அதிருப்தி பயங்கரமாக இருக்கிறது, கட்சியில் எல்லோரும்…. முன்னாள் அமைச்சர்கள் பலர், அதாவது பதவியில் இருந்து எடுக்கப்பட்டவர்கள், இவர்களால் நீக்கப்பட்டவர்களை ஒன்று சேர்த்தாலே ஒரு மாநாடு நடத்தலாம். அந்த வேலையில்தான் இறங்கியுள்ளேன் நான். இவர்கள் எடுப்பதற்கு அதிகாரம் இல்லை, போடுவதற்கும் அதிகாரம் இல்லை.
ஏனென்றால் வழக்கு நிலுவையில் இருக்கிறது. தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள், தோசையை திருப்புர மாதிரி, இவங்க அந்த முறையை பயன்படுத்தி எல்லாத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்கின்ற நடவடிக்கைகள் எதுவுமே நீதிமன்றம் ஒத்துக்கொள்ளாது, நிலையாக நிற்காது.
பெரிய கூட்டம் கூட்டுவேன். இவர்கள் யார் யாரை எடுத்தார்களோ அது செல்லாது, அவர்களை எல்லாம் சேர்த்தாலே போதும் அது ஒரு கட்சியாக மாறிவிடும். எண்ணை பொறுத்தவரை எல்லோரும் ஒன்றாக சேர்ந்தால் கட்சி பிழைக்கும் என்று சொல்கிறேன், வேற எதுவும் இல்லை என தெரிவித்தார்.