Categories
மாநில செய்திகள்

JUSTIN: மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை…. வருமான உச்ச வரம்பு உயர்வு…. தமிழக அரசு உத்தரவு….!!!!

கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் படி வருமான உச்சவரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:” கிராமப்புறங்களில் பயிலும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமான உச்சவரம்பு 72 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது”. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |