ஸ்பெயினில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக பில்போ ஆற்றின் கரை திடீரென உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளநீரானது நகருக்குள் புகுந்ததால் ஏராளமான கார்கள் தண்ணீரில் மிதந்துள்ளது.
ஸ்பெயினில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக பில்போ ஆற்றின் கரையானது திடீரென உடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளநீர் நகருக்குள் புகுந்ததால் ஏராளமான கார்கள் தண்ணீரில் மிதந்துள்ளது. மேலும் மக்களுடைய இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஸ்பெயின் நாட்டின் வடக்குப் பகுதியில் லாரி ஓட்டுனர்களும் கடும் பனிப்பொழிவு காரணமாக தவித்து வருகின்றனர். இந்த நிலையில் பில்போ நகரின் மேயர் ஜோஸ் மேரி தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு வெள்ள நீரை வெளியேற்றுவது, சாய்ந்த மரங்களை அகற்றுவது உள்ளிட்ட மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளார்.