அமெரிக்காவின் ஆர்லாண்டோ பகுதியில் வசிக்கும் சாண்ட்லர் மூர் (7) என்ற சிறுவன், தனது தந்தையுடன் புதிய ஸ்மிர்னா கடற்கரையில் சர்ஃபிங்கில் ஈடுபட்டுள்ளான். அப்போது, திடீரென்று மீன் ஒன்று வேகமாக சிறுவனின் சர்ஃபிங் பலகையில் மோதியதில், கட்டுப்பாட்டை இழந்து கடலில் சிறுவன் தவறி விழுகிறான்.
பின்னர், சிறுவனின் சர்ஃபிங் பலகையில் பொருத்தப்பட்டிருந்த GoPro கேமராவை, அச்சிறுவனின் தந்தை ஆய்வு செய்துள்ளார். அதில், சிறுவனின் பலகை மீது மோதியது சிறிய சுறா மீன் என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, சாண்ட்லரின் தந்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் சுறா மீன் தாக்கும் காணொலியைப் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அக்காட்சி சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
https://twitter.com/ShaunMoore/status/1200980632886808583?s=20
https://twitter.com/ShaunMoore/status/1200978562221793282