Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. இலவச அரிசி, சர்க்கரை விநியோகம்…. அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது புதுச்சேரியில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு இலவச அரிசிக்கான பணம் நேரடியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. தற்போது புதுச்சேரியில் கூட்டுறவு சங்கம் மூலம் 323 ரேஷன் கடைகள், பாக்ஸ்கோ மூலம் 35, தனியார் மூலம் 25 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. காரைக்காலில் எழுத ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அதனால் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஊரடங்கு விதிமுறைப்படி மூடப்பட்டது.

அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க,அரசு வழங்கும் கமிஷன் தொகை மற்றும் மத்திய அரசின் மானியம் சேர்த்து தான் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கடை வாடகை வழங்கப்பட்டு வந்தது. ஊரடங்கு விதிகள் காரணமாக ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகளின் தளர்வுகளை மாநில அரசு அறிவித்து. குறிப்பாக புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமியின் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சர்க்கரை, அரிசி மூட்டைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதனால் இன்னும் ஓரிரு நாட்களில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |