Categories
தேசிய செய்திகள்

எம்.பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட்…. “எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு”…. மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு!!

மாநிலங்களவை எம்பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று மக்களவையின் 2ஆவது நாள் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.. மக்களவை தொடங்கியதில் இருந்து 12 பேர் சஸ்பெண்ட், வேளாண் சட்டங்களை ரத்து செய்ததற்கான மசோதா விவாதம் இன்றியே நிறைவேற்றப்பட்டது போன்ற பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் கோஷம் எழுப்பினார்கள்..

தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அதனை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா  கேட்டுக்கொண்டார்.. முழக்கங்கள் தொடர்ந்ததால் மக்களவையை 2 மணிவரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.. ஆகவே குளிர்காலக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் இன்று எதிர்க்கட்சிகளுக்கும், ஆளும் கூட்டணிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

அதாவது, மாநிலங்களவையில் நேற்றைய தினம் 12 உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர் கட்சி சார்பாக மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை  வைத்தார்.. அதனை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.. அனைத்து விதிகளையும் பின்பற்றியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் எந்த மாதிரியான  நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற ஆதாரம் இருக்கிறது. மழை காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் பெரும்பாலானோரை இன்னும் ஆட்டி படைக்கிறது.

அவர்கள் மன்னிப்பு கூட இதுவரை கேட்கவில்லை.. இத்தகைய சூழ்நிலையில்தான் நேற்றைய தினம் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்து இருக்கிறோம்.. இதுவே இறுதி முடிவு  என்று தெரிவித்தார். இதை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்..

Categories

Tech |