தான்சானியா நாட்டிலுள்ள தீவு ஒன்றில் வசித்து வரும் சில நபர்கள் கடல் ஆமையை சமைத்து சாப்பிட்டதையடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தான்சானியா நாட்டில் பெம்பா என்னும் தீவு அமைந்துள்ளது. இந்த தீவிலுள்ள கடல் ஆமையை சில நபர்கள் சமைத்து சாப்பிட்டுள்ளார்கள். அவ்வாறு ஆமைக்கறியை சமைத்து உண்ட நபர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
அதோடு மட்டுமின்றி 22 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து தீவில் வசித்து வரும் சில நபர்கள் உண்ட ஆமைக் கறியில் ஏதேனும் விஷம் உள்ளதா என்று சந்தேகித்த காவல்துறை அதிகாரிகள் அதனுடைய மாதிரியை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.