லெபனான் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக போராட்டங்கள் வெடித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
லெபனான் நாடு முழுவதும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக போராட்டங்கள் வெடித்துள்ளது. மேலும் தலைநகர் பெய்ரூட்டில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் டயர்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதற்கிடையே மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருவதாகவும், சட்ட விரோத கும்பல்கள் மக்களை அச்சுறுத்துவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் வீட்டு வாடகை 2 லட்சம் லிராவாக அதிகரித்து விட்டதாகவும், தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு 25,000 லிராவாக உயர்ந்துள்ளதாகவும் வேதனையுடன் கூறியுள்ளனர்.