பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித்தொடர்பாளர் பிரித்தானியாவில் பள்ளிகள் கிறிஸ்துமஸுக்கு முன்பாகவே மூடப்படுமா என்பது குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் புதிய வகை “ஒமிக்ரான்” தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிரித்தானிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய வகை “ஒமிக்ரான்” மாறுபாடு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்துதலிலிருந்து விலக்கு எதுவும் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது.
அதேசமயம் அரசாங்கம் முடிந்தவரை கல்வி அமைப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இருப்பினும் பிரித்தானிய அரசாங்கம் பள்ளிகளை கிறிஸ்துமஸுக்கு முன்பாகவே மூடும் எண்ணத்தில் இல்லை. மேலும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித்தொடர்பாளர் “ஒரு சில கட்டுப்பாடுகள் சீர்குலைவை உண்டாக்கும் என்பதை நாங்கள் அறிவோம். எனவே பள்ளிகளை வேறு வழி இல்லாத காரணத்தினால் திறந்து வைக்கவும், தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உள்ளதாக கூறியுள்ளார்.