ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவராக லாலு பிரசாத் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 11ஆவது முறையாக கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், டிசம்பர் 23ஆம் தேதி 2017ஆம் ஆண்டு மாட்டுத்தீவன ஊழலில் சிக்கி, பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் உடல்நிலை பாதிப்படைந்தது. 2018ஆம் ஆண்டு உடல்நிலை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து, அவர் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏழு ஆண்டுகள், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அவருக்கு ரூ. 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. பிகார் மாநிலத்திலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் பிரிவதற்கு முன்பு 1991ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு காலகட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்தபோது, இந்த ஊழல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.