Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN முதல் டெஸ்ட்: வங்காளதேசத்தை வென்றது பாகிஸ்தான் ….! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி …!!!

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது .

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி 26-ஆம் தேதி தொடங்கியது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய  வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 330 ரன்கள் குவித்தது இதன்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்தது .இதில்அதிகபட்சமாக அபித் அலி  133 ரன்னும், அப்துல்லா சபிக் 52 ரன்னும் எடுத்தனர் .வங்காளதேச அணி தரப்பில் தைஜூல் இஸ்லாம் 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் .இதனால் 44 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 157 ரன்களில் ஆல் அவுட் ஆனது .

இதனால் 202 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 4-ம் நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் எடுத்தது .இதையடுத்து ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது .இதில் அபித் அலி                      91 ரன்னும், அப்துல்லா ஷபிக்  73 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின் களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் , அசார் அலி இருவரும் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியாக பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது.

Categories

Tech |