Categories
தேசிய செய்திகள்

“சோனியா காந்தியின் நாட்கள் முடிவடைந்துவிட்டன”…. பாஜக துணைப்பொதுச்செயலாளர் அதிரடி கருத்து….!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதற்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பாஜகவை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல விவரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இதனிடையில் எதிர்க் கட்சிக் கூட்டத்திற்கு காங்கிரஸ் விடைத்திருந்த அழைப்பை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணித்துவிட்டு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக பிரதான கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை முன்னிறுத்த வேண்டும் என்று அவர் முயற்சி செய்து வருகிறார். அதனைப் போல ஆம் ஆத்மி கட்சியும் தேசிய அரசியலில் தனது தளத்தை விரிவு படுத்த வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்த எதிர்க்கட்சியின் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணித்துவிட்டதை பற்றி மேற்கு வங்கம் மணிப்பூர் தொகுதி எம்.பி. திலீப்கோஷ் கருத்து தெரிவித்துள்ளனர் இது குறித்து அவர் கூறியது, எல்லா கட்சிகளும் எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அதன்படி மம்தா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவராக விரும்புகிறார். ஆனால் சோனியா காந்தியின் நாட்கள் முடிவடைந்துவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |