Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக வேளாண் துறையில் காலியாக உள்ள விரிவாக்க துணை அலுவலர் மற்றும் துணை அலுவலர் உதவி வேளாண்மை அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. அவ்வகையில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை சேவை மூலம் கடந்த மார்ச் மாதம் இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் விரிவாக்க துணை அலுவலர் மற்றும் துணை அலுவலர் உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் செயல்முறைகள் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி என்ற உள்நுழைவு போர்ட்டலில் தங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டு இது தொடர்பான விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |