Categories
சினிமா தமிழ் சினிமா

டாக்டரை தட்டிப்பறித்த சிவகார்த்திகேயன் ..!! கொந்தளிப்பில் விஜய் ரசிகர்கள் …….

விஜய் நடித்துக்கொண்டிருக்கும் 64வது படத்தின் பெயர் டாக்டர் என்று பேசப்பட்டு வந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பெயர் டாக்டர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’படம்  சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி கண்ட நிலையில் அவர் தற்போது ’ஹீரோ’ என்னும் படத்தை முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற 20ஆம் தேதி வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ’கோலமாவு கோகிலா’  படத்தை இயக்கிய நெல்சன் இயக்குகின்றார்.இந்த படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு டாக்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

இதை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக  அறிவித்துள்ளார். இந்நிலையில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் 64வது படத்தின் தலைப்பும்  டாக்டர் என்று பேசப்பட்டு வந்ததாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |