Categories
தேசிய செய்திகள்

3 ஆண்டுகளில் 17,299 விவசாயிகள் தற்கொலை…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!!

இந்தியாவில் கடந்த 2018, 2019, 2020 என 3 ஆண்டுகளில் 17,299 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைப் பொருத்தவரையில் 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தலா 6 விவசாயிகளும், 2020 ஆம் ஆண்டில் 79 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பருவமழை ஏமாற்றம், கடன் சுமை, விவசாயத்திற்கு போதிய நிதி இல்லாதது, விளைச்சலில் நஷ்டம், குடும்ப சுமை போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வங்கிக் கடன் உள்ளிட்ட உதவிகள் அரசு தரப்பிலிருந்து கிடைத்தாலும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது குறைந்தபாடில்லை. தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த தகவல் மிகுந்த வேதனை அளிக்கிறது.

Categories

Tech |