தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தெற்கு அந்தமான் பகுதிக்கு நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற இரண்டாம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். அதன் பிறகு மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதியை நெருங்கி கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வங்க கடலில் உருவாகும் புயல்களுக்கு தமிழகத்திற்கு எந்த எச்சரிக்கையும் கிடையாது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.