Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் 75% கல்விக்கட்டணம் வசூல்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!!

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க அரசு குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கல்வி பயிலலாம். இதற்கான முழு கல்விச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும். இந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளியில் கல்வி பெற்ற மாணவர்களுக்கு 75 சதவீதம் கல்வி கட்டணத்தை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி செயலாளர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டனர்.

அந்த நேரத்தில் தனியார் பள்ளிகளில் 25% கட்டணத்தை செலுத்துமாறு மாணவர்களின் பெற்றோர்களை வலியுறுத்தியது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, தற்போது நிலவி வரும் கொரோனா சூழலில் பெற்றோர்களின் நலனைக் கருதி 75% கல்வி கட்டணத்தை வசூல் செய்யுமாறு நீதிமன்றம் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதனால் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி பயின்ற மாணவர்களுக்கு 75% கல்வி கட்டணத்தை வழங்க ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்ககம் அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |