Categories
தேசிய செய்திகள்

சோப்பு, ஷாம்பூ, பிஸ்கெட்டுகள் விலை உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சோப்பு, ஷாம்பூ, பிஸ்கட், பெர்ஃப்யூம், டியோடரண்ட் உள்ளிட்ட அடிப்படை பொருட்களின் விலை உயர உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் முன்பு இல்லாத வகையில் தற்போது உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாட்டில் எரிபொருள் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் வரை புதிய உச்சத்தில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் அடிப்படை பொருட்களை தயாரித்து வரும் ஐடிசி, இந்துஸ்தான் யூனிலிவர், பார்லே உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது நிறுவனத் தயாரிப்புகளில் பொருட்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி சோப்பு மற்றும் ஷாம்பு உள்ளிட்ட பொருள்களுக்கு 12 சதவீதம் வரை விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. பிஸ்கட்டுகள் விலையை 15% முதல் 20% வரை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நொறுக்குத் தீனிகள், தின்பண்டங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களின் விலை 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனைப் போலவே மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட செலவினங்கள் அதிகரித்தது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |