தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலை வாங்கித் தருவது தொடர்பான மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் ராஜேந்திர பாலாஜி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Categories