Categories
அரசியல்

பெண்களின் பாதுகாப்பிற்காக பஞ்சாப் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

இதை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பெண்களின்  பாதுகாப்புக்காக  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் பஞ்சாப் மாநில முதல்வர்  அமரீந்தர் சிங்,  பணிபுரியும்  பெண்கள் இரவு நேரத்தில்  மிகவும் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கு  புதிய திட்டம் ஒன்றை  அறிவித்துள்ளார் . இந்த திட்டத்தின்படி இரவு நேரத்தில் போலீஸ் வாகனத்தில் பெண்கள் பாதுகாப்பாகவும்  இலவசமாகவும்  அழைத்து செல்லப்பட உள்ளனர்.

Image result for பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்

அதன்படி இரவு 9மணி முதல் காலை 6 மணி வரை பெண்களுக்கான இலவச வாகன வசதி அளிக்கப்பட உள்ளது. இரவு நேரத்தில் வீடு திரும்ப பெண்களுக்கு பாதுகாப்பான வாகனம் எதுவும் கிடைக்காதபட்சத்தில் இந்த சேவையை பெண்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரங்களில்  ஆட்டோ டாக்ஸி போன்ற வசதிகள் கூட இல்லாத நிலையில் போலீசாரிடம் பாதுகாப்பான பயண வசதியை பெறஅவசர உதவி எண்கள் 100, 112, 188 ஆகியவற்றில் தொடர்ப்புகொண்டு பெண்கள் இந்த வசதியை கோரலாம். இந்த அழைப்பு நேரடியாக கண்ட் ரோல் ரூமுடன் இணைக்கப்பட்டு உடனே   பெண் போலீஸ் ஒருவருடன் போலீஸ் வாகனம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பெண் பாதுகாப்பாக அவருடைய  வீட்டுக்கு அழைத்துச்செல்லப்படுவார்.இந்த வாகன சேவையை பஞ்சாப் மாநிலம் முழுவதும் அமல்படுத்த நடவடிக்கைகளை  எடுக்குமாறு  அம்ரீந்தர்சிங்  உத்தரவிட்டுள்ளார்  .

Categories

Tech |