Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசு தீவிர நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதிக பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதனால் அவசரகால பணிகளுக்காக அரசின் பல துறைகளிலும் தற்காலிக பணியாளர்கள் அதிக அளவில் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்பட்டு வந்ததாக பலமுறை புகார்கள் மற்றும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டது. தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய போராடத் தொடங்கினார்கள்.

தற்காலிக பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மாத ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று பலமுறை கோரிக்கைகள் தற்காலிக ஊழியர்களின் சார்பாக முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்துவதாக தெரிவித்தது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்காலிக அரசு பணிகளுக்காக ஐந்து மாதங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டவர்களை பணி நிரந்தரம் செய்வது என்பது நாடு முழுவதிலும் எங்கும் சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். மேலும் அரசு காலியிடங்களை நிரப்பும் போது தற்காலிக பணியாளர்களுக்கு பணி வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |