செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியில் மிகவேகமாக நிரம்பி வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது .
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றது . இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் ஏரியில் நீர் நிரம்பி வருகிறது.23 அடி கொள்ளளவை கொண்ட மதுராந்தகம் ஏரி, இப்போது 22 . 4 அடியை எட்டி இருக்கிறது .இதுபோலவே திருவண்ணாமலை மாவட்டத்தில்தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், ஓரிரு நாளில் மதுராந்தகம் ஏரி நிரம்பிவிடும் என்று கணிக்கப்படுகிறது . ஏரியில் அதிகரிக்கும் உபரி நீர் திறந்து விடப்படும் என்பதால், கரையோரங்களில் வாழும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம்வெள்ள அபாய எச்சரிக்கையை அறிவித்துள்ளது .இதனால் மதுராந்தகம் ஏரியை பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வலியுறுத்தியுள்ளார் .