சாலையில் விழுந்த மரத்தை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அகற்றிவிட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குன்னூர்-கோத்தகிரி சாலையில் உபாசி பகுதியில் இருக்கும் மரம் முறிந்து விழுந்துவிட்டது. மேலும் முறிந்த மரமும் மின்கம்பி மீது விழுந்ததால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரத்திற்கு பிறகு சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். அதன்பிறகே அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.