Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் உத்தேச பட்டியல் ….! வெளியான முக்கிய தகவல் …..!!!

2022 ஐபிஎல் சீசனில்  எந்தெந்த அணி யாரை தக்க வைத்துள்ளது  என்பது குறித்து இன்று இரவு 9.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது .இதில் அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொள்ளலாம். இதில் 2 வெளிநாட்டு  வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் .இந்நிலையில் அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் அணிகள் தக்க வைத்துள்ள வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சிஎஸ்கே அணியில் தோனி ,ஜடேஜா, ருதுராஜ், மொயீன் அலி ஆகியோர் தக்க வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் வேறொரு அணிக்கு கேப்டனாக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளதால் இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணியில் எந்த ஒரு வீரரும் தக்கவைக்க விரும்பவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது .இதனிடையே எந்தெந்த அணி யாரை தக்கவைத்துக கொண்டது என்பது குறித்து இன்று இரவு 9.30 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணி வீரர்களின் உத்தேச  பட்டியல் :

சென்னை சூப்பர் கிங்ஸ்:  தோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயீன் அலி
மும்பை இந்தியன்ஸ் :  ரோஹித் சர்மா, பும்ரா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :  விராட் கோலி, மேக்ஸ்வெல்
டெல்லி கேப்பிட்டல்ஸ் :  ரிஷப் பண்ட் , பிருத்வி ஷா, அக்‌ஷர் படேல், நோர்கியா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : கேன் வில்லியம்சன்
 
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன்

Categories

Tech |