Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இன்று முதல் எல்லாமே மாறப்போகுது…. என்னென்ன தெரியுமா?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

ஆண்டின் கடைசி மாதம் அதாவது டிசம்பர் மாதம் இன்று தொடங்கியுள்ளது. இன்று  முதல் வங்கி மற்றும் தனிநபர் நிதி உள்ளிட்ட பல துறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இந்த மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களாக இருந்தால், இனி எஸ்பிஐ கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் அதிர்ச்சியான செய்தி ஒன்று உள்ளது. அதாவது இன்று முதல் கிரெடிட் கார்டு மூலம் கொள்முதல் செய்வது அதிக விலையை காணலாம். கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் rs.99 தனி வரி செலுத்த வேண்டும். அனைத்து வணிகர் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கும்99 ரூபாய் மற்றும் செயலாக்க கட்டணமாக வரி செலுத்த வேண்டும் என்ற எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ ஏடிஎம்-களில் 10000 ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க ஓடிபி எண்ணை உள்ளீடு செய்வதை கட்டாயமாக்கி உள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இவ்வாறு தனியே ஓடிபி எண்ணை பெற்று பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டியின் விலை இன்று முதல் உயரப் போகிறது. ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் தீப்பெட்டியில் விலை 2 ரூபாய் கிடைக்கும். தீப்பெட்டி தயாரிப்பு மூலப்பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால் தீப்பெட்டியின் விலை உயர்த்தப்பட உள்ளது.

அடுத்ததாக கேஸ் சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளது. எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் அரசு எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. தற்போது கச்சா எண்ணெய் விலையில் பெரிய குறைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இன்று  முதல் கேஸ் சிலிண்டர் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு இன்று  முதல் சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும் வட்டியை குறைக்க முடிவு செய்துள்ளது. வங்கி சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதத்தை ஒவ்வொரு வருடமும் 2.90 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைத்துள்ளது.

 

Categories

Tech |