தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி பகுதியில் சக்திவிக்னேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சக்திவிக்னேஷ்குமார் இரவு வேலைக்கு செல்வதற்காக குலையன்கரிசல் வழியே நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து சக்திவிக்னேஷ்குமார் கண்மாய் பகுதி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சக்திவிக்னேஷ்குமாரை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து சக்திவிக்னேஷ்குமார் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செல்போனை பறித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.