Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதில் உடன்பாடு இல்லை…. சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்…. புதுகோட்டையில் பரபரப்பு…!!

பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகை கிடைக்காததால் விவாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த வருடத்திற்கான பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கவில்லை எனக் கூறி பல்வேறு கட்டமாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் மணமேல்குடியிலுள்ள வேளாண் அலுவலகத்தில் சென்னை இன்சூரன்ஸ் அதிகாரிகள் தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் வேளாண் அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வரும் ஞாயிற்றுகிழமையன்று இன்சூரன்ஸ் தொகை கேட்டு சாலை மறியலில் ஈடுபட போவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |