Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற பெண் போலீஸ் ஏட்டு… மர்மநபர்கள் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

மொபட்டில் சென்று கொண்டிருந்த என் போலீஸ் ஏட்டை வழிமறித்து தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி மணிமேகலை நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் பகுதியில் உள்ள குடிமைப்பொருள் கண்காணிப்பு அலுவலகத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் மணிமேகலை வழக்கம்போல பணியை முடித்து விட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து பரமத்தி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவரை மர்ம நபர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.

இதனைதொடர்ந்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் மர்மநபர்கள் மணிமேகலையை வழிமறித்து அவர் அணிந்திருந்த 6 1/2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் மணிமேகலை உடனடியாக சங்கிலியை இழுத்துப் பிடித்துக் கொண்டதால் சங்கிலி அறுந்து பாதி மர்மநபர்கள் கையில் சிக்கியுள்ளது. அதனை எடுத்துகொண்டு மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளனர்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மணிமேகலையை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து மணிமேகலை அளித்த புகாரின் அடிப்படையில் பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீ தேடி . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |