இந்தோனேஷிய மீனவர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க புதையல்களை கண்டுபிடித்துள்ளனது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
தங்க பொக்கிஷங்களுக்கு புகழ்பெற்ற இந்தோனேசியா அரசாட்சியின் தளமான தங்க தீவு என அழைக்கப்படும் இந்த ஸ்ரீவிஜய ராஜ்யம் 700 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாகக் கருதப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மீனவர்கள் இந்த தீவை தேடி வந்துள்ளனர். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பாலைம் பாங்க் பகுதியில் உள்ள மூசி ஆற்றில் இரவு நேரத்தில் டைவ் அடிக்கும் போது இந்த தங்க தீவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்கு விலைமதிப்பற்ற ரத்தினங்கள், தங்க கட்டிகள், தங்க நாணயங்கள் ,தங்க மோதிரங்கள், துறவிகளின் வெண்கல மணிகள் போன்றவை இருந்துள்ளன. மேலும் ஆற்றங்கரையில் டன் கணக்கில் சீன நாணயங்கள், மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. இந்தியா, சீனா, பாரசீகம் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மண்பாடுகளும் மேஜை பொருட்களும் இருந்துள்ளன. இவை அனைத்தும் 7-ஆம் நூற்றாண்டிற்கும் 13-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட ஒரு சக்திவாய்ந்த ராஜியமான ஸ்ரீவிஜய நாகரீகத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது. அப்போது இந்த பேரரசு வாட்டர் வேர்ல்ட் ஆக இருந்துள்ளது.
மக்கள் மர படகுகளை உருவாக்கி பயன்படுத்தி உள்ளன. அந்த நாகரீகம் முடிவுக்கு வந்ததும், அவர்களின் மர வீடுகள், அரண்மனைகள் நீருக்குள் மூழ்கி விட்டதாகவும் ஒரு நூற்றாண்டுக்கு பிறகு இந்த ராஜ்யம் மர்மமான முறையில் மறைந்து விட்டதாகவும் நம்பப்படுகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பாத்திரங்களை வைத்து பார்க்கும் போது மக்கள் அக்கால மக்கள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த ராஜ்யம் இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவு கொண்டு இருந்திருக்கிறது.