சிவகார்த்திகேயன் ‘நாய் சேகர்’ படத்திற்காக ஒரு பாடலை எழுதியுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். இயக்குனர் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”நாய் சேகர்” திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சதீஷ் மற்றும் ‘குக் வித் கோமாளி’ பவித்ரா ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘நாய் சேகர்’ படத்திற்காக ஒரு பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார் என சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். விரைவில் இந்த பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Nanban @Siva_Kartikeyan wrote lyric for a peppy song in our#NaaiSekar 🐕 Composed by #RockStar @anirudhofficial
Mikka Nandri Nanba 🤗😍🤗
Love u always 🤗😍🤗 #AnirudhSingleForNaaiSekar #AnirudhSingle #SkLyricsInNaaisekar @archanakalpathi @aishkalpathi @KishoreRajkumar pic.twitter.com/Hu4R8NeVLJ— Sathish (@actorsathish) November 30, 2021