நாடு முழுதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே பாதிப்பு கணிசமான அளவு குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒருசில மாநிலங்களில் இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தான் வருகிறது.
அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் நோய்த் தொற்றைத் தடுக்கும் பொருட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.