Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடற்கரையில் நின்று கொண்டிருந்த சிறுவன்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

சிறுவனிடம் செல்போன் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுத் தெருவில் பிச்சையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லூகாஸ் கிளிண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த லூகாஸ் கிளிண்டன் திடீரென 16 வயது சிறுவனிடம் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதுகுறித்து வடபாகம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லூகாஸ் கிளிண்டனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 16 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |