டிஜேவுடன் இணைந்து ‘முட்டு முட்டு 2’ பாடலை சிவாங்கி பாடியுள்ளார்.
தமிழ் இசை உலகின் மிகவும் பிரபலமான இசைக் கலைஞர்களில் ஒருவர் டிஜே அருணாச்சலம். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் இசையமைத்த ‘முட்டு முட்டு’ ஆல்பம் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இதன் தொடர்ச்சியாக ‘முட்டு முட்டு 2’ தயாராகி வருகிறது.
இந்தப் பாடலில் விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ புகழ் ஏற்கனவே இணைந்தார். இந்நிலையில், டிஜே தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னுடன் இணைந்து ‘முட்டு முட்டு 2’ பாடலை சிவாங்கி பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Happy to have @sivaangi_k on board!
She will be singing on my new song #MuttuMu2
Releasing a sneak peak soon pic.twitter.com/OarKQARhg5
— TeeJay Arunasalam (@Iamteejaymelody) November 30, 2021