தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வேலூரில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரிஞ்சிபுரம் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று விரிஞ்சிபுரம் தரை பாலத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 322 மீட்டர் நீளம் கொண்ட விரிஞ்சிபுரம் தலத்தில் 80 மீட்டர் அளவுக்கு செய்த சேதமடைந்துள்ளது. இங்கு தரைபாலம் கட்ட முடியாது என்பதால் ரூ.30 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் கட்டப்படும்.
தமிழகத்தில் 1681 தரைப்பாலம் பகுதியில் உயர்மட்டக் மேம்பாலம் கட்ட ரூ.2,401 கோடி ஒதுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன் முதல் கட்டமாக 648 மேம்பாலங்கள் கட்டுவதற்காக ரூ.1609 கோடியில் பணிகள் நடைபெறும். இதில் முதல் கட்டமாக விரிஞ்சிபுரம் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.