அனுஷ்கா தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அனுஷ்கா. இவர் விஜய், அஜித், சூர்யா, ரஜினி என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘பாகுபலி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இவர் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அனுஷ்கா, தளபதி விஜய்யுடன் இணைந்து கமர்ஷியல் கதையில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.