நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த விலையேற்றத்தின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது .ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது. சில மாதங்களில் இரண்டு முறையும் கூட மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டும் தலா 25 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை தற்போது 2,133 ஆக உயர்ந்துள்ளது. எனவே இன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் எந்த மாதிரியாக மாற்றியமைக்கும் விலை ஏற்றம் இருக்குமா ?அல்லது குறையுமா? என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் டீ, காபி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான டீக்கடைகளில் விலை உயர்வுக்கான பட்டியல் இப்போது ஒட்டி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.