நாடு முழுவதும் பென்சன் வாங்குவோரின் வாழ்வை எளிதாக்கும் விதமாக Face Recognitionஎன்ற புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பென்சன் வாங்குபவர்களின் முகத்தை கண்டறியமுடியும். பென்ஷன் வாங்குபவர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாத இறுதிக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் கிடைக்கும்.
இதை அறிந்து பென்ஷன்தாரர்களின் வாழ்வை எளிமை படுத்துவதற்காக டிஜிட்டல் வாழ்வு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு அறிமுகப்படுத்தியது. இந்த வரிசையில் தற்போது இந்த தொழில் நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பமே ஒரு ஓய்வூதியதாரர்களின் வாழ்ந்ததற்கான சான்றாக அமையும். இதனால் பென்சன் பெறுபவர்களின் வாழ்வு எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தினால் 60 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் மாநில அரசு பென்சன் வாங்குபவர்களும் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.