நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. வாரம் தோறும் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போடுவதில் கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் இலவச சிகிச்சை கிடையாது என்ற கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் வாரந்தோறும் கொரோனா நெகட்டிவ் சான்று தர வேண்டும். தங்களின் சொந்த செலவில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.