Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (05.12.2019) நாள் எப்படி இருக்கு ?… முழு ராசி பலன்கள் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று சொந்த தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் வளரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணவரவு வந்து சேரும். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்றவும். இன்று மன தைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாகவே நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும் கௌரவமும் கூடும்.

எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இன்று மற்றவர்கள் செயல்களால் மன வருத்தம் கொஞ்சம் ஏற்படலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்துவந்த பிரச்சினை முடிவுக்கு வரக்கூடும். கடன் பிரச்சினைகள் அனைத்துமே இன்று கட்டுக்குள் இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் நன்கு பாடங்களை கவனித்து படிப்பது மிகவும் நல்லது.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட பணி நிறைவேற கூடுதல் முயற்சி தேவைப்படும். நண்பரின் ஆலோசனை நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். அரசு சார்ந்த சீரான ஓய்வு மனதிற்கு புத்துணர்ச்சியை  கொடுக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும் பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகத்தான் வந்து சேரும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை கொஞ்சம் வரக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்களும் ஏற்படக்கூடும். கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாக செயல்படுங்கள் அது போதும். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.

அப்பொழுதுதான் அடுத்த பாடம் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு இன்று காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று பெரியவரின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பீர்கள். உங்கள் மீதான நல்ல மதிப்பு இன்று அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். கூடுதலாக பணவரவும் நன்மையை கொடுக்கும். இன்று மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும்.

எதிர்பார்த்த லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்துத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு மட்டும் கேட்க நேரிடலாம். அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மட்டும் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சித்தர்கள் வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சிலர் உதவுவது போல பாசாங்கு செய்யக்கூடும். உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள தாமதம் படிப்படியாக சீராகும். பணவரவை விட செலவு கொஞ்சம் இன்று கூடும். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரும் இருந்து ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.

பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை பளிச்சிடும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். மற்றவர்கள் ஆலோசனையை கேட்டு உங்களை நாடி வரக்கூடும். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். மனம் இன்று நிம்மதியாகவே காணப்படும். மாணவக் கண்மணிகள் மட்டும் இன்று கொஞ்சம் கூடுதலாக உழைத்து படியுங்கள்.

படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். ஆசிரியர்களின் சொல்படி கேட்டு நடந்து கொள்ளுங்கள். அதுபோலவே இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று சமயோசிதமாக செயல்படுவீர்கள். நல்ல விஷயங்களை பேசுவதில் ஆர்வம் வளரும். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கையில் வந்து சேரும். இன்று குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தியைக் கொடுக்கும்.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பெண்கள் வீண் பேச்சைக் குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று பண வரவு தாராளமாகவே இருக்கும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அது மட்டுமில்லாமல் வாகனத்தில் செல்லும் பொழுது கொஞ்சம் பொறுமையாக  நிதானமாக செல்லுங்கள். கூடுமானவரை தொலைபேசியில் பேசிக் கொண்டு செல்லாதீர்கள். புரிந்துகொண்டு செயல்படுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கூர்ந்து கவனித்து பாடங்களை படிப்பது மிகவும் சிறப்பு.

சக மாணவரின் ஒத்துழைப்புடன் சில முக்கியப் பணியையும் செய்வீர்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆனால் பாடத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்

கன்னிராசி அன்பர்களே..!! சிலரது செயல் மனதில் அதிருப்தியை கொடுக்கலாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் மூலதனம் தேவைப்படும். அவசியமற்ற வகையிலான பணம் செலவை தவிர்ப்பீர்கள். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதியை கொடுக்கும். இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காணபீர்கள். உடல் களைப்பும் சோர்வும் கொஞ்சம் உண்டாகலாம். கவனமாக இருப்பது மட்டும் நல்லது.

பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். செலவு கொஞ்சம் கூடும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். பாடங்களை மட்டும் கவனமாக படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஓரளவு கலகலப்பான சூழல் இருக்கும். புதிய முயற்சிகள் கூட வெற்றியை கொடுப்பதாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று நன்றி மறந்தவரை பெருந்தன்மை குணத்துடன் மன்னிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆதாய பண வரவில் சேமிப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு ஏற்படும். இன்று எதிர்பார்த்த பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு வந்து சேரும். மனநிம்மதி கொஞ்சம் குறைய கூடிய சூழலை சந்திக்கக் -கூடும். வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை இன்று அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் ஓரளவு உதவிகளையும் நீங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது மட்டும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் சாமர்த்தியமாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். அதனால் ஓரளவு மகிழ்ச்சி ஏற்படும்.

மாணவக் கண்மணிகள் இன்று கூடுதலாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். அப்போதுதான் அடுத்த பாடம் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்களில் அன்பின் குணம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான மாற்றத்தை பின்பற்றுவீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். தாயின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று மனம் மகிழும் சம்பவங்கள் ஏற்படும். மன நிம்மதியும் மன திடமும் இன்று உருவாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாகவும் இன்று காணப்படுவீர்கள். திடீர் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி நன்மை ஏற்படும். இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும். மாணவச் செல்வங்கள் மட்டும் கொஞ்சம் உழைத்து படியுங்கள். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

விளையாட்டை ஏறக்கட்டி விட்டு படிப்பில் கவனத்தைச் செலுத்தினால் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் சொந்தப் பிரச்சினை பற்றி பேச வேண்டாம். கூடுதல் முயற்சியினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். அதிகம் பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். சத்தான உணவு உண்பதால் உடல் நலம் பெறும். இன்று எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது மட்டும் நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் விருந்தினர் வருகை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழு மூச்சாக இன்று பாடுபடுவீர்கள். இன்று அனைத்து விஷயங்களுமே உங்களுக்கு சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளின் போது முதலீடுகள் மட்டும் செய்ய வேண்டாம். இதில் மட்டும் கவனமாக இருங்கள்.

கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று செயலில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படலாம். நிதானமும் அக்கறையும் பின்பற்றுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. உறவினர் வகையில் அதிகம் பணம் செலவு செய்ய நேரிடலாம் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு சிறப்பாக வந்து சேரும்.

நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்களும் வந்துசேரும். வியாபாரப் போட்டிகள் தடை  தாமதங்கள் நீங்கும். இன்று சிறப்பான நாளாக இருப்பதற்கு கூடுமானவரை ஆலயம் சென்று வாருங்கள். மனம் ஓரளவு நிம்மதியாக காணப்படும். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் படிக்க வேண்டியிருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது சிறப்பு.

மற்றபடி குடும்பத்தில் இன்று எந்த பிரச்சினையும் இருக்காது. கலகலப்பு ஓரளவு இருக்கும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் அது போதும். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட செயலை நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் விலகிச்செல்லும். பணவரவில் முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும். பணவரவு தாராளமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களைப் படிக்க வேண்டியிருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரவிற்கு எந்த குறையும் இருக்காது. தொழிலில் கூட்டாளிகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். முன்னேற்றமான பாதையில் செல்வீர்கள்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சிறிய செயலும் பலமடங்கு உங்களுக்கு நன்மை கொடுப்பதாக அமையும். தொழில் வியாபாரம் செழிக்க அக்கறையுடன் பணிபுரிவீர்கள். இலக்கு நிறைவேறி உபரி பணவரவு இருக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் உழைப்பும் கொஞ்சம் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் கொஞ்சம் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழல் இருக்கும்.

கௌரவம் அந்தஸ்து உங்களுக்கு உயரும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மட்டும் நல்லது. இன்று சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். இன்று வெளியூர் பயணத்தில் நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கலும் சிறப்பாகவே இருக்கும். கூடுமானவரை பண பரிவர்த்தனையில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். யாருக்கும் பஞ்சாயத்துக்கள் எதுவும் பண்ணாதீர்கள். பணமும் கைமாத்தாக வாங்கிக் கொடுக்காதீர்கள். இதில் மட்டும் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

இன்று மாணவர்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாடு செய்தால் உங்களுடைய காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். கூடுமானவரை சித்தர்கள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |