Categories
தேசிய செய்திகள்

ஒமிக்ரான் எதிரொலி: விமான கட்டணங்கள் உயர்வு…. அதிர்ச்சி அறிவிப்பு…!!!

ஒமிக்ரான் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் ஒமிக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலியாக பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

எந்தெந்த நாடுகள் எவ்வாறு ஒமிக்ரான் பாதிப்புகளை கையாளுகின்றனஎன்பதை பொறுத்து கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .அதன்படி கனடாவிலிருந்து டொராண்டோ நகரில் இதுவரை இருந்த குறைந்தபட்ச கட்டணம் 80 ஆயிரத்திலிருந்து 2 லட்சத்து 30 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போல பல நகரங்களுக்கும் விமான கட்டணம் இரண்டு முதல் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |