15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் வீரர்கள் ஏலம் புதிதாக நடைபெற உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இதனால் ஏற்கனவே உள்ள 8 ஐபிஎல் அணிகள் தலா 4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும் .அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலியை ரூபாய் 15 கோடிக்கும் ,மேக்ஸ்வெல் ரூபாய் 11 கோடிக்கும் முகமது சிராஜ் ரூபாய் 7 கோடிக்கும் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா ரூபாய் 16 கோடிக்கும், பும்ரா ரூபாய் 12 கோடிக்கும், சூர்யகுமார் யாதவ் ரூபாய் 8 கோடிக்கும், பொல்லார்ட் ரூபாய் 6 கோடிக்கும் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர் .