Categories
மாநில செய்திகள்

தமிழகம் – கேரளா இடையே இன்று முதல் பேருந்து சேவை தொடக்கம்…. சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கேரளா -தமிழ்நாடு இடையே பேருந்து போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி அரசு நேற்று பேருந்து போக்குவரத்திற்கான அனுமதியை வழங்கி அதற்கான உத்தரவை பிறப்பித்தது.

இது தொடர்பாக பேசிய கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆண்டனி ராஜு, கேரள அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகம் – கேரளா இடையே போக்குவரத்து சேவையினை மீண்டும் நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று முதல் தமிழ்நாட்டிற்கு கேரள அரசு பேருந்துகள் இயக்கப்படும். அதிலும் குறிப்பாக நாகர்கோவில், கோயம்புத்தூர், பழனி, வேளாங்கண்ணி மற்றும் தென்காசி ஆகிய இடங்களுக்கு முதற்கட்டமாக பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |