Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே செம மாஸ்…! வேற லெவல்ல ட்ரெண்ட் ஆகுது …. கெத்து காட்டிய திருமா…. குஷியான சிறுத்தைகள் …!!

விசிக கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தான் ஏன் இருக்கையில் ஏறி நடந்தேன் என்பது குறித்து விளக்கம் அளித்ததை தொடர்ந்து திருமாவளவனின் தொண்டர்கள் திருமாவை கொண்டாடுவோம் என்ற ஹேஸ்டேகை டிரெண்ட்  செய்து வருகின்றனர். இது தற்போது இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றது.

https://twitter.com/SengaiKamaraj/status/1465407334562230274

கடந்த சில தினங்களுக்கு முன்பு  திடீரென ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வீட்டில் இருந்து வெளியே வருகிறார். அப்பொழுது முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதையடுத்து நாற்காலியில் திருமாவளவனை நிற்க வைத்து அதனை மெதுவாக இழுத்தபடி வெளியே வருகின்றனர். கார் வரை இப்படி நாற்காலியிலேயே அழைத்து வருகின்றனர். திருமாவளவன் ஷூ போட்டிருப்பதால் அது நனையாமல் இருப்பதற்காக இப்படி அழைத்து வந்தனர்.  பின்னர் நாற்காலியை நேராக காரில் இறக்கி அதில் ஏறிச் செல்கிறார்.

இதனை பார்த்த  பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஏன் அவர் தண்ணீரில் இறங்கி நடக்க மாட்டாரா? என்ற பலவிதமான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில் இருக்கை மீது நடந்து வந்தது ஏன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் தங்கியுள்ளது வீடு அல்ல. அறக்கட்டளை ஒவ்வொரு மழையின் பொழுதும் கழிவுநீர் வீட்டை சுற்றி சூழ்ந்து கொள்ளும். நான் அவசரமாக டெல்லிக்கு புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், இருக்கை மீது ஏறி நடந்தேன். அவசரமாக புறப்பட்டபோது நான் கீழே விழாமல் இருக்க தொண்டர்கள் என்னை பிடித்து கொண்டனர் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விசிக கட்சியின் ஆதரவாளர்களும், தொல் திருமாவளவன் அவர்களின் தொண்டர்களும் திருமாவை கொண்டாடுவோம் என்று ஹேஸ்டேகை டிரெண்ட்  செய்து வருகின்றனர். இது தற்போது இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றது.

Categories

Tech |