தமிழகத்தில் 7,296 செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்கள் இடங்கள் மதிப்பின் அடிப்படையில் தான் நியமிக்கப்படுவர். இதில் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் பணி நியமனங்கள் இருக்கும். மனிதாபிமான அடிப்படையில் 7,296 பேருக்கும் 20 மார்க் வழங்கப்படும். படிப்பிற்கு ஒரு மார்க், பணியாற்றிய அனுபவத்திற்கு ஒரு மார்க், வசிப்பிடத்திற்கு ஒரு மார்க், கொரோனா காலத்தில் பணியாற்றுவதற்கு 20 மார்க் என 100 மார்க்கில் அவர்கள் எடுக்கும் மார்க் அடிப்படையில் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.
மாநிலம் முழுவதும் உள்ள துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் தேவை. 7,296 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://nhm.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.